புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்விற்கு இணையதளம் மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
புதுவை பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளது. இங்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத இணையதளம் மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிப்புகள் & அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்தும் கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் பொது (CAT) என்னும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையானது முதலில் இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு, மீதமுள்ள காலி இடங்கள் புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.