தமிழக தொழிற்பயிற்சி மையங்களில் புதிய பாடப்பிரிவுகள் – அமைச்சர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

தமிழக தொழிற்பயிற்சி மையங்களில் புதிய பாடப்பிரிவுகள் – அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடப்பிரிவுகள்:
மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதற்கு தேவையான படிப்பினை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர். 12ம் வகுப்பு முடித்த பின்னர் மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து படிப்பர். கல்வி அறிவை பெற விரும்பும் மாணவர்கள் பட்டப்படிப்பையும், தொழில் அறிவை பெற விரும்பும் மாணவர்கள் தொழிற்கல்வி சம்பந்தமான படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர். தமிழகத்தில் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் எலக்ட்ரீசியன், பிளம்பர், பெயிண்டர், ஃபிட்டர், போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 10 அல்லது 12ம் வகுப்பு முடித்து நேரடியாக தொழிற்பயிற்சி நிலையங்களில் இணையும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மாறுதல்கள் வேண்டும் என கூறப்பட்டு வந்தது. இளைஞர்களை அதிகம் கொண்ட இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என பல்வேறு துறைகளையும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போதைய கால சூழ்நிலையில் வேலைவாய்ப்பு மிக முக்கியமானதாக இருந்து வரும் நிலையில் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ரேடியாலஜி டெக்னீசியன், ஏர்கிராஃப்ட் மெயின்டெனன்ஸ் போன்ற புதிய பாடப்பிரிவுகள் தொடங்க தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவை அமலுக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews