பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கும்போது, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல தரப்பினரை கேட்டு முடிவு எடுப்பதை போல், பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் முடிவெடுத்து அறிவுரை வழங்கி உள்ளார். நாளை முதல் 9 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை சிஇஓக்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் போட வேண்டும். அது கிழிந்துவிட்டால், மாற்று மாஸ்க் வழங்க, மற்றொரு மாஸ்க்களை வழங்க வேண்டும். இதற்காக, கூடுதலாக மாஸ்க்குகளை தலைமை ஆசிரியர்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு கழிவறை முன்பும் சானிடைசர் வைக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் மாஸ்க், சானிடைசர் வைத்திருக்க வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் தான் அமர வைக்கப்பட வேண்டும். 6 நாள் வகுப்புகள் நடக்கும். 5 பாடங்கள் நடத்தப்படும். காலை 9:30 மணிக்கு துவங்கும் வகுப்புகள் மாலை 3:30 மணிக்கு முடித்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வருப்பறை மேஜைகளில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர வைக்கப்பட வேண்டும். ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் இல்லாததால், அந்த அறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனக்கூறியுள்ளோம். பள்ளிகள் திறப்பை கண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறந்ததும், மாணவர்களிடம் அதிக பாடங்களை கொடுத்து பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஆசிரியர்களிடம் கூறியுள்ளோம். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் விரைவாக முடிக்க ஆலோசனை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.95 சதவீத ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர் . விரைவில் அனவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பணியாளர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.