தமிழக பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு – உயர் கல்வித்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 24, 2021

Comments:0

தமிழக பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு – உயர் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாலிடெக்னிக் அரியர்:
தமிழகத்தில் பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் சேர்ந்து படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாலிடெக்னிக் படித்து முடித்து நீண்ட காலமாக அரியர்களுடன் இருக்கும் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு தேர்வு எழுத உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி முன்னாள் மாணவர்கள் தங்களது அரியர் தாள்களில் தேர்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டயக் கல்வி முடித்து அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தாத மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கொரோனா காரணமாக தேர்வுகள் எழுத முடியாத சூழ்நிலை உருவானது.

எனவே தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆணை வழங்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்க தேர்வு வாரிய தலைவர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews