ஈரோடு அரசு அருங்காட்சியகம் சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, மாணவர்களுக்கு மூவர்ண காகித கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் போட்டி நடக்கிறது.
சுதந்திரதினத்தையொட்டி இந்திய தேசிய கொடியை சிறப்பிக்கும் மூவர்ண காகித கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் போட்டி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடக்கிறது. இதில், 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள், தாங்கள் கைவினைப் பொருட்கள் செய்வதை மூன்று நிமிடம் காணொலியாக பதிவு செய்து, 94868 61397 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் அனுப்ப வேண்டும். மேலும் மாணவ, மாணவியர் செய்த கைவினைப் பொருட்கள், 13- ம் தேதிக்குள் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்படும், என ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.