"பள்ளிகளை மீண்டும் திறந்து வகுப்புகளைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, அனைத்து மாநில முதல்வா்களுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகிகளுக்கும், 56 கல்வியாளா்கள், மருத்துவ நிபுணா்கள், பிற துறை வல்லுநா்கள் அடங்கிய குழு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொற்றுநோயியல் நிபுணா் சந்திரகாந்த் லஹாரியா, இந்திய நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவரும், கோவிட் -19 லான்செட் குழுவின் இந்திய பணிக்குழு உறுப்பினருமான சுனீலா காா்க், இந்திய குழந்தைகள் மருத்துவ அகாதெமியின் முன்னாள் தலைவா் நவீன் தாக்கா், ‘டீச் ஃபாா் இந்தியா’வின் தலைமை நிா்வாக அலுவலா் ஷாஹீன் மிஸ்திரி உள்ளிட்டோா் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.
இக்கடிதத்தின் நகலை பிரதமா் அலுவலகம், மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத் தலைவா் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனா். அதில், பள்ளிகள் திறப்பின்போது, மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி முன் நிபந்தனை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனா்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால் பள்ளிகள் மூலம் கரோனா தொற்றுப் பரவி, மூன்றாவது அலையால் கரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அச்சத்தால், பல்வேறு மாநிலங்களில் இன்னும் அனைத்துப் பள்ளி வகுப்புகளும் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளன. ஆனால், பள்ளிகளைத் திறப்பதால் ஆபத்தில்லை என்பதற்கு உலகளாவிய சான்றுகள் உள்ளன. எனவே, பள்ளிகளைத் திறந்து அனைத்து வகுப்புகளையும் மீண்டும் நடத்துவது குறித்து மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்.
உலக அளவில் இந்தியா உள்ளிட்ட நான்கைந்து நாடுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக் குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
இளம் வயது குழந்தைகளுக்கு கரோனா ஆபத்து குறைவாக உள்ளதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) பரிந்துரைப்படி முதலில் உயா்நிலைப் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களும் குரல் கொடுக்க வேண்டும்.
அதேசமயம் குழந்தைகளுக்கு கரோனா பரவல் ஆபத்து குறைவாக உள்ளதால், பள்ளிகள் திறக்கும்போது மாணவா்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கட்டாயமாக்கக் கூடாது. ஏனெனில், பள்ளி வயது மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைந்த விகிதத்திலேயே உள்ளதுடன், உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், பள்ளிகள் மூடப்பட்டதால் இதுவரையிலும் ஏற்பட்ட பிற விளைவுகளையும் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால் மாணவா்களுக்கு கல்விக் குறைபடு ஏற்படுகிறது; குறிப்பாக சிறுமிகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்புவது குறைகிறது. இவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தொடருமானால், அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இவை மிக மோசமான விளைவுகளாகும்.
எனவே, தொற்றுப்பரவல் போன்ற சவால்களையும் அவற்றைத் தடுக்கக் கொண்டுவரும் கட்டுப்பாடுகளின் விளைவுகளையும் சமநிலையில் பரிசீலித்து தக்க முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அவ்வாறு பரிசீலித்தால், பள்ளிகளை உடனடியாகத் திறப்பதே சிறந்த வழி என்பது உறுதியாகும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது." https://www.dinamani.com/india/2021/aug/29/classes-in-schools-should-begin-immediately-letters-from-medical-professionals-and-educators-to-state-chiefs-3689167.html#:~:text=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%2C%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%2056,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.