சென்னை மாநகரின் வரலாற்றினை சிறப்பிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைப்பெற உள்ள மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! - சென்னை மாநகராட்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

சென்னை மாநகரின் வரலாற்றினை சிறப்பிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைப்பெற உள்ள மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! - சென்னை மாநகராட்சி

செ.வெஎண், 195
நாள்: 18.08.2021
சென்னை மாநகரின் வரலாற்றினை சிறப்பிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதராசப் பட்டினம் 1639ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தச் சிறப்பு மிக்க மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் குடிசைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் 2208.2021 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்தல், தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் மற்றும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்துதல் போன்ற பணிகளும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடமாடும் முகாமினை தொடங்கி வைத்தல், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் காப்பகங்களில் அழகுப்படுத்தும் வகையில் கோலங்கள் போடுதல், பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் அழகுப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், குடிசைப் பகுதிகளில் சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை செல்ஃபி புகைப்படம் எடுத்து 94451 90856 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தில் பகிரப்படும். மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp-ல் பகிரலாம். ஆர்வமுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், மேலும், இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாட CSR நிதியினை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய விவரங்களை https//forms.gle/8KYXEhgjuTK7opfR7 என்ற இணைப்பில் சென்று பதிவேற்றம் செய்யலாம். மாநகராட்சி கட்டடச் சுவர்கள். பாலங்களின் கீழுள்ள இடங்கள் மற்றும் இதரப் பொது இடங்களை மறுவடிமைக்கும் திட்ட வரைபடப் போட்டி மேற்குறிப்பிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய படைப்புகளை https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற இணையதள இணைப்பில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கான நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். மேலும், சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து 2208-2021 முதல் 28.08.2021 வரை நேரடியாக மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை சீர்மிகு நகரத் திட்ட அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், இதுகுறித்த தகவல்களை 94451 90856 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள மெட்ராஸ் தின விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews