தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் யுஜிசியின் 12பி எனப்படும் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது. இதன் மூலம் கல்விசார் திட்டங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
கல்வியியல் பல்கலை கழகம்:
தமிழகத்தில் சிறப்பான நல்லாசிரியர்களை உருவாக்கும் நோக்கில் கடந்த 2008 ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.மாநிலம் முழுவதும் பல்வறு கல்வியியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த வருடம் 12பி அந்தஸ்து பெற விண்ணப்பித்தது. மத்திய கல்வி அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து யுஜிசியின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு 12பி எனப்படும் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் கல்விசார் திட்டங்களை மேற்கொள்ளவும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் மத்திய அரசின் நிதியுதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதலாக சலுகைகளை பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கல்விசார் திட்டங்களின் மூலமாக கல்லூரி இன்னும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.