இடைநிற்றலை தடுக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு ரொட்டி, முட்டை - பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

இடைநிற்றலை தடுக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு ரொட்டி, முட்டை - பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை

IMG_20210816_071153
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டித் துண்டு வழங்கும் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசுப் பள்ளிகளில் இலவச சத்துணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது. தற்போது பள்ளிகள் மூடியுள்ளதால் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.

இதை தவிர்க்க சத்துணவில்முட்டையுடன் சேர்த்து ரொட்டித்துண்டு வழங்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “கரோனா பரவலின் தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக உயர்வதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து, தன்னார்வு தொண்டுநிறுவனங்கள் மூலம் ரொட்டிவழங்கப்பட உள்ளது. இதற்கானஅறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும்” என்று தெரிவித்தனர்.
IMG_20210816_071122

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews