இளங்கலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி மும்பை பல்கலைக்கழகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள மும்பை பல்கலைக்கழகம் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக தேர்வுகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்களை கொண்டுள்ளது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் பி.காம் மற்றும் பிஎஸ்சி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. முன்னதாக மும்பை பல்கலைக்கழகத்திற்கு வந்த இமெயில், ‘ இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிடப்படாவிட்டால், பல்கலைக்கழக கட்டிடத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்துவோம்’ என்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மும்பை பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மதிப்பீட்டு இயக்குனர் கூறுகையில், ‘இளங்கலை கலை (பிஏ), இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) மற்றும் இளங்கலை வணிகவியல் (பி.காம்) முடிவுகளை வெளியிடும்படி எங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் அனுப்பப்பட்ட அமைப்பின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.
Search This Blog
Sunday, August 15, 2021
Comments:0
தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி மும்பை பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.