"விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை புதியதாக சேர வந்த மாணவரை மாலை அணிவித்து வரவேற்று, ரூ.1000 வழங்கியுள்ளார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் கடந்த கல்வியாண்டு ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழங்கினார். இந்த ஆண்டு தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து வழங்கி வருகிறார். வத்திராயிருப்பு பகுதியில் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர் சி.ஸ்ரீஹரி, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வந்திருந்தார். அவரை தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி க.மகேஸ்வரி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மேலும், மாணவரது சேர்க்கையை உறுதி செய்யப்பட்ட பின்னர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் இப்பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் ரூ.1000-யை மாணவரின் தாய் சி.பொன்செல்வியிடம் வழங்கினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புக்கேற்ற அடிப்படை பயிற்சிகள், ஒப்படைப்புகள் மாணவர்களின் மனம் மகிழ வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒப்படைப்புகளைச் செய்து, கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை படித்து வருகிறார்கள். தொடர்ந்து பள்ளியைத் தேடி தனியார் பள்ளி மாணவர்கள் வந்து கொண்டுள்ளார்கள் என்றார்." https://www.dinamani.com/tamilnadu/2021/aug/14/student-who-came-to-join-a-government-school-near-srivilliputhur-3679967.html#:~:text=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0,%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.