ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளை கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளை கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக

பொருள்: ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளை கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆதி திராவிட நலத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும், மாணவர் விடுதிகளும் நடத்தப்படுகின்றன. அவற்றின் பெயரில் இருக்கும் ஆதிதிராவிடர் என்கிற முன்னொட்டு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயரில் உள்ள சாதி அடையாளத்தை நீக்கி அவற்றை சமூக நல பள்ளிகள் ( Social welfare schools ) என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.


ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளின் நிர்வாகம் தற்போது வட்டாட்சியர், ஆதிதிராவிட நல அலுவலர் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்வித்துறைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த அதிகாரிகளின் கீழ் அதை வைத்திருப்பதால் முறைகேடுகள் நடப்பதோடு கல்வி வளர்ச்சிக்கும் அது தடையாக உள்ளது. எனவே அந்தப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம், அத்துடன் விடுதி காப்பாளர்களாக ஆசிரியர்களை மாற்றம் செய்யாமல் தனியே பணி அமர்த்தம் செய்ய வேண்மெனவும் கேட்டுகொள்கிறோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews