பழங்குடியினர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 12, 2021

Comments:0

பழங்குடியினர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு!

ஆணை
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக, பொருளாதார கல்வி நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு அவர்களுக்கென தனியாக ஒரு வாரியம் ஆதிதிராவிடர் நல அமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டு ஆனை வெளியிடப்பட்டது.

2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்த்தல், பதிவினை சரிப்பார்த்தல் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு ஆணை வெளியிடப்பட்டது. 3 மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், பழங்குடியினர் நல வாரியம் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை. மூக்குக் கண்ணாடிகள் வாங்கிட உதவித்தொகைப் (ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி. முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும்.அணைத்து நல வாரியங்களாலும் இதேபோன்று உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவும், சீர் மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணமடைத்தால் வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000/ ஆகவும் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ5000 ஆகவும் உயர்த்தி வழங்குவது. போலவே பழங்குடியினர் நலத்துறையிலுள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ5000 லிருந்து 20,000 ஆகவும் அன்னாரின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்குமாறு பழங்குடியினர் நல இயக்குநர் அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.

4. மேற்காணும் பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதனடிப்படையில் பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்நுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித் தொகையினை ரூ.5,000/ லிருந்து ரூ.20,000 ரூபாய் இருபதாயிரம் மட்டும்) ஆகவும். ஈமச்சடங்கு உதவித் தொகையினை ரூ 2000 லிருந்து ரூ5,000 ரூபாய் ஐந்தாயிரம் மட்டும். ஆகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இவ்கதவித் தொகையினை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை இவ்வாரியத்தின் பொது வைப்பு கணக்கில் ஒப்பளிக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளாம் அரசு ஆணையிடுகிறது.

5. இவ்வாணை நிதித்துறையின் அலுவல் சார்பற்ற எண்/24483நிதி(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2021, நாள் 1907-202-இல் இசைவு பெற்று யெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews