தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 27, 2021

Comments:0

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


உதவித்தொகை :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மூன்றாண்டு இளம்நிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மாணவா்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் வருடந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளில் பயில்வோர் இந்த உதவி தொகை பெற அவர்கள் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவா்கள், விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கவும், புதிய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து,5.11.2021க்குள், கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்கவும் வேண்டும்.

மாணவர்களின் வங்கி விவரங்களை இணைத்தல் கட்டாயமாகும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் புதுப்பிப்பதற்கு 14.11.2021 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 31.12.2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் அறியலாம் அல்லது அரசின் இணையத்தளத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews