தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புவிதிகளை பின்பற்றாமல் பெரும் பாலானஅரசு பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படுகிறது' என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) குற்றம்சாட்டியுள்ளது.
மதுரையில் 'பெப்சா' மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: அரசு விதிமுறைகளை பின்பற்றி எந்த தனியார் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கிறது. ஆனால் மாநிலத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கின்றன. 50 சதவீதம் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்கின்றனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வதால் கொரோனா அபாயம் அதிகரித்துள்ளது. வகுப்புக்கு வருகை தரும் மாணவர்களின் நிகழ்வுகளை அதிகாரிகள் மூடிமறைத்து, புத்தகங்கள், அரிசி பருப்பு கொடுக்க வரவழைக்கிறோம் என தவறான தகவல் தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளிகள் செயல்படுவதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 'பெப்சா' சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.