கல்லூரி சேர்க்கையில் போலி மதிப்பெண் சான்று கொடுத்தால் கடும் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 09, 2021

Comments:0

கல்லூரி சேர்க்கையில் போலி மதிப்பெண் சான்று கொடுத்தால் கடும் நடவடிக்கை

கல்லூரி சேர்க்கையின்போது, போலி மதிப்பெண் சான்று கண்டறியப்பட்டால், மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழஉயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் ஆகியவற்றில் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின்போது, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமே பெறப்பட வேண்டும். அந்தந்த கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளின் விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் கையேட்டில் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் விதி மீறல்கள் நடந்தால் அதற்கு அந்தந்த கல்லூரி முதல்வர்கள், மாணவர்கள் சேர்க்கைக் குழுவும் முழு பொறுப்பேற்க வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை அனைத்துப் பாடப் பிரிவிலும் கட்டாயம் பின்பற்றி அமல்படுத்த வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி பிரிவில் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்பாக, உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும். கல்லூரிகளில் மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க வேண்டும். கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாணவர்களை கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது. விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும். மதிப்பெண் சான்றுகளை அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் சரிபார்க்கும்போது அந்த சான்று போலி என்று கண்டறியப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். தரவரிசையை பின்பற்றியே சேர்க்கை நடத்த வேண்டும், அதற்கு அந்தந்த கல்லூரி முதல்வர்களே பொறுப்பாவார்கள். அரசுக் கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டால், கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்க்க வேண்டி இருந்தால், கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் அனுமதி கேட்கலாம். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews