தெலுங்கானாவில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா பரவலால் திறக்கபடாமலே இருந்தன. இதை அடுத்து கடந்த ஜூலை மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு அப்போதைய டெல்டா வகை வைரஸ் பரவலாக கொரோனாவின் இரண்டாம் அலையால் தள்ளிப்போனது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணியாலும், நிலையான தடுப்பு நடவடிக்கைகளையும் தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்த நிலையில், பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 8 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரின் அனுமதி கடிதத்தை வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதனை அடுத்து கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பின் நிலையான வழிகாட்டுதல்களான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகரம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் சுத்தம் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.