திரிபுராவில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா குறைந்து வருகிறது. திரிபுராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.