ஆணை:
மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், நடப்பு 2021ஆம் ஆண்டில் நமது மாநிலத்தில் பரவி வரும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டிய அனைவருக்கும் விலக்களித்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத வேண்டிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனித்தேர்வர்களுக்காக 12ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் நடைபெற உள்ளதாகவும் இத்துணைத் தேர்வுகளை மாற்றுத் திறனாளி மாணவர்களும் எழுத உள்ளனர் என்றும் தற்போது நிலவி வரும் கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவர்களால் தேர்வு எழுத உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்றும் எனவே நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போல தனித்தேர்வர்களாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் நடைபெறும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் விதமாக உரிய ஆணைகளை வெளியிடுமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 2. மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் பிரிவு 17(0)-ன் படி. மாற்றுத் திறனாளிகள் கல்வி கற்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் ஏதுவான சூழலை ஏற்படுத்தும் பொருட்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் சூழ்நிலை இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதன் அடிப்படையிலும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்புக்கான துணை தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என அரசு ஆணையிடுகிறது. மேலும் இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் ஆணையிடப்படுகிறது. மேலும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.