தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தொற்று தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை குறைக்கும் பணியில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதனை செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என மக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 14.57 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 2.17 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் தடுப்பூசிகளை இரண்டாம் தவணை செலுத்துவதில், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே வரும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் வரையறைக்கு உட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி போட வலியுறுத்த வேண்டும். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பள்ளிகள் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.