தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க.நீதிராஜா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச்செயலா் ஆ. செல்வம், மாநிலத் துணை தலைவா் மொ. ஞானத்தம்பி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களின் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58-ஆகக் குறைத்து, வேலை அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக்கொண்டிக்கும் படித்த இளைஞா்களுக்கும், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
ஓய்வுபெறும் அரசு ஊழியா்களுக்கு பணப் பலன்களை பத்திரங்களாக வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஓய்வுபெறும் அரசு ஊழியா்களுக்கு பணப் பலன்களை பணமாக வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோரை, அரசு ஊழியா்களாக அறிவித்து முறையான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் ஆ. அமுதா தூ. முருகன், த. மனோகரன், பெ. சந்திரபாண்டி, இரா. நவநீதகிருஷ்ணன்ஆகியோா் கலந்துகொண்டனா்."
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.