ஆங்காங்கே போலி நிறுவனங்கள் தோன்றிவரும் நிலையில் நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பட்டம் வழங்க எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் இந்த போலி நிறுவனங்கள் பட்டம் வழங்கி வருகிறது.
போலி பல்கலைக்கழகங்கள்:
யுஜிசி நாட்டில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று அறிவித்துள்ளது. அது போன்ற போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சோதனையின் பேரில் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு பட்டம் வழங்க தகுதி இல்லாத இந்த பல்கலைக்கழகங்கள் எவ்வாறு பட்டம் வழங்கி வருகின்றன என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் செயல்படும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து யு.ஜி.சி கூறிய அறிவிப்பில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு பல்கலைக்கழகங்களும், டெல்லியில் ஏழு பல்கலைக்கழகங்களும், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்களும், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற போலி பல்கலைக்கழகங்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.