தென்காசி சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 6 மாதங்கள் பணிபுரிவதற்கு 18 மருந்தாளுநர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்து ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் https://tenkasi.nic.in/notice_category/recruitment/y; என்ற தென்காசி மாவட்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ ‘துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தென்காசி 627 811’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு 10.8.2021 அன்றுகாலை 10 மணி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Search This Blog
Sunday, August 01, 2021
Comments:0
Home
JOB
தென்காசி சுகாதார மாவட்டத்தில் - கரோனா தடுப்பு பணிக்கு 18 மருந்தாளுநர்கள் நியமனம் : ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தென்காசி சுகாதார மாவட்டத்தில் - கரோனா தடுப்பு பணிக்கு 18 மருந்தாளுநர்கள் நியமனம் : ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.