மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்வு... புதிய சித்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் : பிடிஆர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 13, 2021

Comments:0

மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்வு... புதிய சித்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் : பிடிஆர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

*தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறப்படும் கூற்று தவறானது
*ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது
*கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது *அடுத்த 10 வருடங்களில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக்கப்படும்
*வேளாண் இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரத்திற்கான மானியத்திற்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு
*தமிழகத்தில் கொரோனா தொடர்பான செலவுகளுக்கு ரூ.241.40 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது
*தமிழகத்தில் தினசரி 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ளது
*தினசரி 8 லட்சம் பேருக்கு செலுத்தும் திறன் இருந்தும் 2.40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வருகின்றன
*தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.257 கோடியில் துவங்கப்பட்டுள்ளது
*டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு
*இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும். *மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்
*முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.69 கோடி ஒதுக்கீடு
*தமிழ்நாடு நகர்புற சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கீடு
*தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.116 கோடி ஒதுக்கீடு
*கலைஞர் முன்மொழிந்த சித்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
*பழனி முருகன் கோயில் மூலம் புதிய சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.
*தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு
*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி ஒதுக்கீடு

*15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews