பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு இரண்டு மாதங்களும், பிளஸ் 2 மாணவர்களுக்கு நான்கு மாதங்களும் நேரடி வகுப்புகள் நடந்தன.இதை தொடர்ந்து, பள்ளிகளை திறக்க வாய்ப்பிருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, பிளஸ் 2 வரையில் அனைத்து ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களும், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும், வரும் 6ம் தேதி முதல், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.அதே நேரத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஆனால், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக அவர்களுக்கு மதிப்பெண் தேவைப்படுகிறது.
இந்நிலையில், தேர்ச்சி சான்றிதழில் திருப்தி இல்லாமல், மதிப்பெண் வேண்டும் என விரும்பும் மாணவர்களுக்கு, துணை பொதுத்தேர்வு நடத்த பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.