CLAT 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் – NLU வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

1 Comments

CLAT 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் – NLU வெளியீடு!

சட்டபடிப்பு நுழைவுத்தேர்வான CLAT தேர்வு நாளை (ஜூலை 23) நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLU) வெளியிட்டுள்ளது.

CLAT தேர்வு

இந்தியாவில் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு CLAT என்ற தேசிய நுழைவுத்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் (NLU) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வீடியோ பதிவாக NLU வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 23) நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வு வழிகாட்டுதல்களின் படி, தேர்வர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும், தேர்வு எழுதும் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள் என வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 99.14 க்கு மேல் வெப்பநிலை உடையவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஹைதராபாத்தின் NALSAR துணைவேந்தர் பைசான் முஸ்தபா, எந்தவொரு கேள்விகளுக்கும் மாணவர்கள் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளார். முன்னதாக இந்த நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. ஆனால் இவை தற்போது 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு கேள்விக்கு பதிலளிக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 என்ற எதிர்மறை மதிப்பெண் கணக்கிப்படும். தேர்வுக்கு செல்பவர்கள் அட்மிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் போன்ற அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதியம் 2 மணிக்கு துவங்கும் இத்தேர்வில் பிற்பகல் 2.15 மணிக்குப் பிறகு மாணவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் 2 மணி நேரம் மட்டுமே நடைபெறும் இந்த தேர்வு மாலை 4 மணியளவில் முடிவு பெறுகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தண்ணீர் பாட்டில், சானிட்டைசர், பேஸ் ஷீல்ட் மற்றும் கையுறைகள் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். மொபைல் போன்கள் அனுமதிக்கப்படமாட்டாது. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் தங்கள் கேள்வி தாள்களையும், OMR தாளின் நகலையும் எடுத்துச் செல்லலாம். மேலும் இன்விஜிலேட்டர் OMR தாளை எண்ணி முடிப்பதற்குள் தேர்வு அறையை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என விளக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. blogger_logo_round_35

    Really nice information thanks for sharing very useful...... For more visit clat exam coaching in Pune

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84701721