இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்வு!

இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்வு!

இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 68 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சிறந்த முதல்வர் ஸ்டாலின்:

இந்தியாவில் கொரோனா இராண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் நோய் பரவல் தன்மையை அறிந்து ஊரடங்குகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி அனைத்து மாநில முதலமைச்சர்களும் கட்டுப்பாடுகளை அதிகரித்தனர். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பேரிடரை சவாலாக எடுத்து கொண்டு தடுப்பு பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில் ஆர்மாக்ஸ் மீடியா என்ற அமைப்பு இந்தியாவில் சிறந்த முதலவர் யார்? என்ற ஆய்வை மேற்கொண்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 68 சதவிகித வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் பதவி ஏற்று தமிழக மக்களை தொற்றிலிருந்து காக்க இரவு, பகல் பாராது உழைத்தார். மருத்துவ கட்டமைப்புகளையும், தடுப்பு மையங்களையும் அதிகப்படுத்தி நாள் ஒன்றுக்கு 35,000 இருந்த பாதிப்பு எண்ணிக்கையை 3,000 ஆக குறைத்துள்ளார்.

மேலும் தமிழக முதல்வரை தொடர்ந்து கேரள முதல்வர் பிரனாயி விஜயன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.கடந்த மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முதலிடம் பெற்றிருந்தார். தற்போதய கணக்கெடுப்பில் கேரள முதல்வரை பின்னுக்கு தள்ளி தமிழக முதல்வர் தன் முயற்சியால் நற்பெயர் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இது தமிழகத்திற்கு பெருமையளித்துள்ளது. பல்வேறு தலைவர்களும் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆர்மாக்ஸ் மீடியா அமைப்பின் வாக்கெடுப்பில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 3வது இடமும், அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா 4வது இடமும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews