கணினி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

கணினி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி இன்று தொடக்கம்

கணினி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி இன்று தொடக்கம் ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத் தியமூர்த்தி கூறியதாவது: தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் பள்ளி ஆசி ரியர்களுக்கு கணினி அடிப் படை பயன்பாடு, கல்வி மேலாண் தகவல் மையம், உயர் தொழில் நுட்ப ஆய்வகம், ஒருங்கிணைந்த கணினி பயிற்சி தொடர் பாக திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட் டுள்ளது. இதன் படி, முதல் கட்டமாக மாவட்ட அள வில் தேர்வு செய்யப்பட்டவல்லுநர்களுக்கு 5 நாள் பயிற்சி இன்று தொடங்கி ஜூலை 30 வரை நடைபெ றுகிறது. இப்பயிற்சிக்கு கணினி பாட ஆசிரியர்கள் மணி மொழி(அரசு மேல்நி லைப்பள்ளி, தினைக்கு ளம்), பெர்ஜிக்(சாயல்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி). லிங்க ராஜன்(பனைக்குளம் பகுருதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி), தௌபீக் ரஹ்மான் (ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி), பழனிகுமார்(உப்பூர் அரசுமேல்நிலைப்பள்ளி), கார்த் திகேயன் (இளம்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி), முத்துமாணிக்கம்(சாயல் குடிஅரசுபெண்கள் மேல்நி லைப்பள்ளி), அருணாசல ராஜா(ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி), வெங் கடேசன்(அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி), ஜெரோம்(தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி) ஆகியோர் மாவட்ட வல்லுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 நாள் பயிற்சிக்கு பிறகு அனைத்து அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் தொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக் கும் பயிற்சியளிக்க நூறு சதவீதம் தயார்நிலையில் இருக்க வேண்டும். பயிற்சி நடவடிக்கை களை மாவட்டக்கல்வி அலுவலர்கள் கண்கா ணிப்பு ஒரு குழுவை அமைத்து பயிற்சி தொடர் பாக அன்றாட அறிக் கையை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews