தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு – இன்று முதல் துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு – இன்று முதல் துவக்கம்!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தீயணைப்பு, ஆயுதப்படை, சிறைக்காவலர் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வானது இன்று (ஜூலை 26) முதல் துவங்கியுள்ளது.

உடல் தகுதித்தேர்வு
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு கொரோனா காரணமாக தடைபட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதையொட்டி, உடல் தகுதித்தேர்வை நடத்த இருப்பதாக சில தினங்களுக்கு முன்னாக அறிவிப்புகள் வெளியானது. இதையொட்டி மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2,727 பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று தொடங்கி உள்ளது.

இத்தேர்வுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கான சில வழிகாட்டுதல் நடைமுறைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடல் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள், மைதானத்துக்கு வரும் 4 நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து அதற்கான நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதான அழைப்பு கடிதத்துடன், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்த கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஒரு ஆவணத்தின் அசல் போன்றவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுகளை மாற்று நாட்களில் நடத்த பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews