ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு தேர்வு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு நாளை வெளியிடப்பட உள்ளது.
மாணவர் சேர்க்கை தேர்வு: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதய பள்ளிகள் உள்ளது. இது மிக குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின்படி பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு மாணவர்கள் தங்கி படிக்கும் அம்சம் உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்களில் 2021-22 கல்வி ஆண்டிற்கான ஜவஹர் நவோதயா வித்யாலயா ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வு மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு மூலம் நடத்தப்பட இருக்கிறது.
இந்த நுழைவு தேர்வுக்காக மொத்தம் 2,41,7009 பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். 11,182 மையங்களில் 47,320 மாணவர்களை தேர்வு செய்வதற்கான சோதனை நடத்தப்படும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. இந்த நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை முதல் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து அட்மிட் கார்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு பல மொழிகளில் நடத்தப்படுகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழிகளின் அடிப்படையில் மொழிகளின் பட்டியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு 2 மணி நேரத்திற்கு நடத்தப்படும். மன திறன், எண்கணிதம் மற்றும் மொழி குறித்த வினாக்கள் 100 மதிப்பெண்களுக்கு 80 வினாக்களுடன் இருக்கும். வினாக்கள் பல தேர்வு அடிப்படையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.