தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் சென்று மருத்துவ படிப்பு முடித்து விட்டு தமிழகத்தில் மருத்துவ சேவை செய்வதற்காக தமிழக அரசு கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று சீமான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவ மாணவர்கள்:
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவ படிப்பை முடித்து விட்டு, தமிழகத்தில் வந்து நேரடியாக பணியாற்ற முடியாது. அதற்கு இந்திய மருத்துவ கழகத்தின் விதிப்படி, நீட் தேர்வுக்கு இணையான FMGE (Foreign Medical Graduate) தகுதித்தேர்வை எழுதி தேர்வு பெற்று அந்த சான்றிதழை தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்வது, தடையில்லா சான்றிதழும் (NOC) பெற வேண்டும். மேலும், ஓராண்டு மருத்துவ படிப்புடன் கூடிய கட்டாய மருத்துவ சேவைக்கு ரூ.3,50,000 மற்றும் NOC பெறுவதற்கு ரூ.2 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீட் தேர்வுகளால் மருத்துவ வாய்ப்பு பறிபோன மாணவர்கள், கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றே வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பயின்று திரும்புகின்றனர். அதன் பின்னர், கட்டாய மருத்துவ சேவை செய்வதற்காக கிட்டத்தட்ட 6 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவ படிப்பிற்கே பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், மேலும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவது மோசமானதாகும். பல்வேறு தடைகளைத் தாண்டி மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் சுமார் 600 பேர் தமிழகத்தில் மருத்துவ பணிபுரிய விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ சேவையைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க அரசு இவ்வாறு கட்டணம் வசூலிப்பது வேதனைக்குரிய செயலாகும். அதனால், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவ சேவையை தொடங்குவதற்கு லட்சக்கணக்கான ரூபாயை கட்டாயப்படுத்தி கட்டணமாக வசூலிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.