Breaking

Saturday, July 24, 2021

அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் மதுரை மாவட்ட அரசு மகளிர் மற்றும் செக்கானூரணி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிய கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் தொடருகிறது. ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஆன்லைன் மூலம் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தொழிற்படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பெரும்பாலும் விரைவில் வேலைக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்தவுடன் தொழிற்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். 1 வருடம் அல்லது 2 வருட பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து கற்று பயிற்சியும் பெறுகின்றனர். மற்ற கல்லூரிகளை தொடர்ந்து மதுரை மாவட்ட அரசு மகளிர் மற்றும் செக்கானூரணி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

ஜூலை 28 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் 94990 55748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் விண்ணப்பித்தவர்களுக்கு இணையம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog