போட்டித்தேர்வு மதிப்பெண்கள் படி சிவில் நீதிபதிகள் பணிமூப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் போட்டித் தேர்வு மூலம் பணியில் அமர்த்தப்பட்ட சிவில் சர்வீஸ் நீதிபதிகள், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி மூப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசுத்துறை அலுவலகங்களிலும் புதிய பணியாளர்களை ஏற்படுத்த போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் வரை போட்டித்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நீதிமன்றங்களில் பணி புரிந்து வரும் நீதிபதிகளுக்கும் சில போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டித்தேர்வுகளில் சிவில் நீதிபதிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு பணிமூப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகளுக்கு பணி மூப்பு செய்வது தொடர்பான மனு அடிப்படையில், நீதிபதிகள் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை முதன்மையாக வைத்து, பணிமூப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், இளநிலை சிவில் நீதிபதிகளின் பணிமூப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.