புதுச்சேரியை போலவே கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து அங்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல நாமும் ஏன் பள்ளிகளை திறக்க கூடாது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முதல்வரிடமும் இது குறித்து கூறியுள்ளோம். தமிழகத்திலும் கொரோனா சூழலைப் பொருத்து முதல்வரின் வழிகாட்டுதல் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.