டெல்டா வைரஸ் ஆபத்தானது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 04, 2021

Comments:0

டெல்டா வைரஸ் ஆபத்தானது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கரோனாவின் டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக ஒட்டுமொத்த உலகமும் இப்போது ஆபத்தான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வகை கரோனா வைரஸ் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. மிக குறுகிய காலத்தில் சுமார்98-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த டெல்டா வைரஸ் பரவி யுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் டெல்டா வைரஸால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது. இது தொடர்ந்து மரபணு மாற்றம் அடையக்கூடும். இதுதொடர்பாக அந்தந்த நாடுகளின் அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து தரப்பு மக்களும்முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டங்களை தவிர்க்க வேண்டும். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். வைரஸ் பரவலை தடுப்பதில் வளர்ச்சி அடைந்த நாடுகள், ஏழை நாடுகளுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள், ஆக்சிஜன், தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசி தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக ஏழை நாடுகளின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவி செய்யவேண்டும். உலகளாவிய அளவில்தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி மூலம் மட்டுமே கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews