கோவை: அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக, பணியில் இருக்கும் போதே, 'யு-டியூப் சேனல்' நடத்தி, கற்பித்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல், சில ஆசிரியர்கள் ஊதியம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அரசு சார்பில், tnschools.in என்ற இணையதளம் உள்ளது. இதில், அரசு சுற்றறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் பதிவேற்றப்படும். ஆனால், பள்ளி செயல்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெறாது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சென்றடையும் முன்பு, சில யு-டியூப் சேனல்களில், இந்த சுற்றறிக்கைகள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் உடனுக்குடன் ஆசிரியர்கள், தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதிக பார்வையாளர்கள் சேனலை பார்வையிட வேண்டுமென்பதற்காக, சமீப காலமாக, சில தவறான, பழைய அறிவிப்புகளும், தேதி மாற்றி பதிவேற்றப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:
பணியில் இருக்கும் போது, பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ வேறு தொழில்களில் ஈடுபட கூடாதென, அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், யு-டியூப் சேனல்களை, சில அரசுப்பள்ளி ஆசிரியர்களே நடத்தி வருவதோடு, கற்பித்தல் பணிகளிலும், முழுமையாக கவனம் செலுத்துவதில்லை.
தற்போது ஆன்லைன் வகுப்பு நடப்பதால், எந்நேரமும் மொபைல்போனுடன் இருக்கும் சில ஆசிரியர்கள், புதிதாக கல்வி யு-டியூப் சேனல்களை துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஊதியம் ஈட்டுவதோடு, நம்பகத்தன்மையற்ற தகவல்களை பகிர்வதும் அதிகரித்துள்ளது.
பள்ளி வேலை நேரத்தில், சொந்த பணிகளில் ஈடுபடுவோரை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.