தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கட்டணம் குறைப்பு – முதல்வரிடம் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கட்டணம் குறைப்பு – முதல்வரிடம் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர் சங்கம் முதல்வருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக்கட்டணம், வங்கி சேவைக்கட்டணம், இணையதள கட்டணம், சான்றிதழ் பதிவேற்ற கட்டணம் என கூடுதலாக ரூ 300 செலவாகிறது. இது பொறியியல் விண்ணகட்டணத்துடன் ஒப்பிடும்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் காலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டணம் ரூ.50 மட்டுமே உள்ளது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் ரூ.150 மட்டுமே உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மட்டும் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இதில் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தமிழக பொறியியல் சேர்க்கை விண்ணப்பக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகமே ஏற்ற நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews