வயது முதிர்ந்தவர்கள் ஓய்வூதியம் பெற வழங்கப்டும் ஜீவன் பிரமாணப் பத்திரம் பெற இனி வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை. அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
தபால் துறை அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள முதியவர்கள் ஓய்வூதியம் பெற தேவையான வாழ்வு சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமாணப் பத்திரம் பெற முன்னதாக வங்கிகளில் நேரடியாக சென்று காத்திருக்க வேண்டியிருக்கும். கொரோனா பரவல் காரணமாக வயதானவர்கள் நேரடியாக வருவதால் உடல்நிலை பாதிக்கும் என்பதால் ஆன்லைன் மூலமாக வாழ்வு சான்றிதழ் பெற டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்பம் பற்றி முன் அனுபவம் இல்லாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இதனால் பெரும் சிரமம் அடைவதால் தற்போது இந்திய தபால்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஓய்வூதியம் பெற வாழ்வு சான்றிதழை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தபால் துறை ட்விட்டரில், “மூத்த குடிமக்கள் இனி அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் இருக்கும் பொதுச்சேவை மையத்தில் எளிதாக ஜீவன் பிரமாணப் பத்திரம் தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளது.
முன்னதாக ஓய்வூதியம் பெற தேவையான வாழ்வு சான்றிதழை பெற சம்பந்தப்பட்ட ஓய்வூதியர் நேரடியாக வர வேண்டிய தேவை இருந்தது. இதனால் ஓய்வூதியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இனிமேல் அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று வாழ்வு சான்றிதழ் பெறலாம். இதனால் வயதான காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அலைச்சல் குறைவாக இருக்கும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.