புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆளுநர் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆளுநர் விளக்கம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் 21-வது வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் இன்று (ஜூலை 21) நடைபெற்றது. அதில், கொரோனா பரவல் நிலவரத்தின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஜூலை 16 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் 21-வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் இன்று (ஜூலை 21) நடைபெற்றது. அதில் புதுச்சேரியில் கொரோனா நிலவரம், மூன்றாம் அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கருப்பு பூஞ்சை நோய், கொரோனா தடுப்பூசி, வண்ண சுவர் ஓவியங்களுடன் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வண்ண சுவர் ஓவியங்களுடன் தயார் செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்கு பிறகே பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகளில் பெற்றோர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவனை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவர்கள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும். தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே மூன்றாம் அலையை குறைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews