பள்ளி துணை ஆய்வாளர் பதவி - சீனியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

பள்ளி துணை ஆய்வாளர் பதவி - சீனியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக கல்வித்துறையில் பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,க்கள்) பதவியில் சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 120 மாவட்ட கல்வி அலுவலகங்களில் (டி.இ.ஓ.,க்கள்) பட்டதாரி ஆசிரியர் அந்தஸ்தில் டி.இ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் உதவிபெறும் 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியரின் கற்பித்தல் திறன், பள்ளி ஆண்டாய்வு, சேர்க்கை நீக்கப்பதிவேடுகள் ஆய்வு, ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மை உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடுவர். இப்பதவிகளில் உயர்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனலில் உள்ள சீனியர் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால் தற்போது 90 சதவீதம் டி.ஐ.,க்கள் ஜூனியர் ஆசிரியராக உள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “அ.தி.மு.க., ஆட்சியில் அரசியல் பின்னணியில் பலர் இப்பதவிகளை கைப்பற்றி உள்ளனர். ஜூனியர் நிலையில் உள்ளவர்களால் சீனியர் ஆசிரியர்கள் திறனை ஆய்வு செய்வதில் பல மாவட்டங்களில் 'ஈகோ' சர்ச்சை எழுகிறது. இதை தவிர்க்க தகுதியுள்ள சீனியர்களை இப்பதவியில் நியமிக்க கமிஷனர் நந்தகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews