பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் தற்போது இக்கோரிக்கையை எழுப்புவது குறித்து அ.தி.மு.க.,விற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டம் 2003 ல் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து இதுகுறித்து ஆய்வு செய்ய 2016 ல் அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு குழு அமைத்தார். 2016 தேர்தலிலும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் ரத்து செய்யவில்லை. குழு 2018 ல் அறிக்கை அளித்தும் அதை முதல்வராக இருந்த பழனிசாமி வெளியிடவில்லை.
தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை என முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையாகவுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை தற்போதைய அரசு ரத்து செய்ய வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.