பள்ளிகளை படிப்படியாக திறக்க வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 01, 2021

Comments:0

பள்ளிகளை படிப்படியாக திறக்க வலியுறுத்தல்

''பள்ளிகளை படிப்படியாக திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் வலியுறுத்தினார்.
சங்க நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பின் நந்தகுமார் அளித்த பேட்டி:தனியார் பள்ளிகளுக்காக மாணவர்களை அழைத்து வர, 50 ஆயிரம் வாகனங்களை இயக்கி வருகிறோம். மார்ச் 17 முதல் பள்ளி வாகனங்கள் இயங்கவில்லை. ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்.சி., கட்டணம் செலுத்தும் படி கூறுகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.பள்ளிகளை திறக்காதபோது, வாகனங்களுக்குரிய வரிகளை செலுத்த இயலவில்லை. கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உள்ளனர். இருக்கை வரி, சாலை வரி, இன்சூரன்ஸ் போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

பள்ளிகளை படிப்படியாக திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளை துவக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews