தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை கல்வி அலுவலர்!
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும் ஜூலை 7ம் தேதியான இன்று முதல் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் வருகை:
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி டிவி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த காரணத்தால் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதற்கு முதற்கட்டமாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் சில ஆசிரியர்களும், ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ் அவர்கள், மாவட்டத்தில் உள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக அவசர அறிவிப்பை அனுப்பியுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் புதன்கிழமையான இன்று ஜூலை 7ம் தேதி முதல் பள்ளிக்கு தினமும் கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர்களும் வர வேண்டும் என்றும், ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர் நலன் சார்ந்த பணிகள், பதிவேடுகளை பராமரிக்கும் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.