பள்ளிகளை திறக்க, அரசு உத்தரவிடாத நிலையில், புத்தக பைகளுடன், மாணவர்கள் பள்ளிக்கு வந்தது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில் செயல்படும், அரசு துவக்கப் பள்ளியில், 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பள்ளிக்கு, புத்தக பைகளுடன் வந்து செல்கின்றனர்.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால், பள்ளியை திறக்க அரசு உத்தரவிடாத நிலையில், மாணவர்களை புத்தக பைகளுடன் பள்ளிக்கு வரச் சொல்வது யார், தலைமையாசிரியர் எனில் அவர்கள் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:
நாங்கள் எந்த மாணவர்களிடமும் அப்படி சொல்வதில்லை. நேற்று குழந்தைகளுக்கு, முட்டை, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது.அப்போது, சில மாணவர்கள் 'பேக்'குடன் வந்தனர். அவர்களிடமும், பேக்குடன் வரக்கூடாது என, அறிவுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, திருவாலங்காடு வட்டார கல்வி அதிகாரி ரமேஷ் கூறியதாவது:கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயில, அந்த கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் ஒருவேளை அங்கு வந்திருக்கலாம். இதுகுறித்து தலைமையாசிரியரிடம் விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.