தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் சுருக்கெழுத்து தேர்வுகள் இனி டிஜிட்டல் முறையில் நடக்க இருப்பதாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஆணை:
2021ம் ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகள் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முன்னதாக அறிவித்துள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தொழில்நுட்பத் தேர்வுகள் பொதுவாக பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தொழில்நுட்ப தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முன்னதாக 2021-ம் ஆண்டுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுவதாக தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்தது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பொதுவாக தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் நடக்கும் போது வாசிப்பாளர் ஒருவர் செய்திகளை வாசிப்பார்கள். ஆனால், இனிமேல், சுருக்கெழுத்து பாடங்களுக்கு டிஜிட்டல் கருவிகளின் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதற்காக இனிவரும் தேர்வுகளில் ஆடியோ முறையில் பதிவு செய்யப்பட்ட இணைப்பு வாயிலாக சுருக்கெழுத்து பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. இந்த புதிய முறைக்கு தகுந்த படி, தேர்வர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.