மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 20) அறிவிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் குறித்த எவ்வித அறிவிப்புகளும் இன்னும் வெளியிடப்படவில்லை.
தேர்வு முடிவுகள்
தற்பொழுது வெளிவந்துள்ள தகவலின் படி CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CBSE தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்படாது. CBSE யுடன் இணைந்த பள்ளிகள், மாணவர்களுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டு வருகிறது. உரிய செயல்முறைகள் முடிந்தவுடன் முறையான அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. முன்னதாக கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக சுமார் 21,50,761 CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்மாணவர்களுக்கு உள் மதிப்பீடுகள், சோதனை தேர்வுகள், இடைக்கால தேர்வுகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் கீழ் CBSE வாரியத்தின் கூற்றுப்படி, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு அம்மாணவர்களின் முக்கிய 5 பாடங்களில், மூன்று பாடங்களில் எடுத்த 30% மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. அதன் கீழ் ஒவ்வொரு பாடத்திற்கும் 20 மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் அம்மாணவர்கள் பெற்ற உள் மதிப்பீடுகள், சோதனை தேர்வுகள் அல்லது தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் 80 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.