மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. இனி, 9ம் வகுப்பு மதிப்பெண் போதும்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. இனி, 9ம் வகுப்பு மதிப்பெண் போதும்..!

10ம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், 9ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், '2021 - 2022 கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பதிவை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலகு அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இதுவரையில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020 - 2021ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு இறுதித் தேர்வு நடத்துவது கொரோனா காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணவர்களை சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews