தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண், மற்றும் 11 ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் போன்றவற்றை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் கூறுகையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் அவர்கள் தனித்தேர்வர்களுடன் இணைந்து தேர்வு எழுதலாம்.
மேலும் அந்த நேரத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தால் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் இல்லையென்றால் அப்போதைய சூழ்நிலையில் அரசின் முடிவே இறுதியானது. ஊரடங்கால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.