மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ். படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022-ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது. ஆனால், உச்ச நீதீமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கைக் காரணம் காட்டி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடா்பும் இல்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்த மறுக்கிறது. நீதிமன்றத்தில் 2021-2022- ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்தும் அதனை அமல்படுத்தவில்லை. எனவே இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என வாதிட்டாா். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருகின்றனா். உயா்நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படவில்லை என வாதிட்டாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரையின்படி, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு 2021-2022-ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அந்த உத்தரவாதத்தை தற்போது நிறைவேற்ற வில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கு முதலில் தீா்வுக்கு வரட்டும். பின்னா் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எந்த வகையிலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கு தடையாக குறுக்கே நிற்கப்போவது இல்லை.
எனவே, இந்த வழக்கில் மத்திய அரசின் செயல்பாடு, உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ் படியாமல் மற்றும் அதை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை 2021-2022 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்" https://www.dinamani.com/tamilnadu/2021/jul/20/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-69-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-3663597.html#:~:text=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.