Breaking

Wednesday, July 21, 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு - செய்தி வெளியீடு எண்:475 - நாள்:21.07.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நேற்றைய சமூக வலைதளப் பதிவில் திரு. கணேஷ் என்ற ஓவியக் கலைஞர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு தான் வரைந்த அய்யன் திருவள்ளுவர் ஓவியத்தை பதிவிட்டிருந்தார். அவரது ஓவியத் திறமையைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், '' அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஒவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

வள்ளுவம் போல் இந்த ஒவியமும் வாழும்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog